அர்ஜுன் அலோசியஸ்- கசுன் பலிசேனக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மத்திய வங்கி பிணை முறிகல் மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது இருவரையும் எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.