சிங்கள பெரும்பான்மையினர் இழைத்த அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: சுமந்திரன்!

சாதாரண பெரும்பான்மை ஆட்சியின் காரணமாக ஏற்பட்ட அநீதிகளை சிங்கள பெரும்பான்மையினர் ஏற்றுக்கொண்டு, பிற மக்களின் மறுசீரமைப்பு மற்றும் நீதிக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் இன்று காலியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் புதிய அரசியலமைப்பால் தீரப் போவதில்லை. எனினும் புதிய அரசியலமைப்பு ஒரு அடிப்படை ஆகும். அது இல்லையேல் ஒரு பிரச்சனையையும் ஆராய முடியாது.

நிலையான பெரும்பான்மையைக் கொண்ட நாடொன்றில் அனைத்து மக்களுக்கும் சமனான முறையில் குடியுரிமை, உரிமைகள் கிடைக்கத்தக்க வகையில் ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுதல் முக்கியமனது.

மேலும், சிங்கள பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்கு இழைத்த அநீதிகளை ஒப்புக் கொண்டு, பிற மக்களின் சீர்திருத்தம் மற்றும் நீதிக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.