மட்டு மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வாளராக மீண்டும் இந்திரா மோகன்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உள்ளக கணக்காய்வாளராக திருமதி இந்திரா மோகன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இதற்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.

மட்டு மாவட்ட செயலகத்தின் உள்ளக கணக்காய்வாளராக திருமதி இந்திரா மோகன் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும், அவரை தவிர்த்து சமுர்த்தி கணக்காளராக இருந்த பஷீரை அந்த பதவியில் நியமிக்க பிரதியமைச்சர் அலிசாகிர் மௌலானா பகீரத பிரயத்தனம் செய்தார்.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு நேரில் சென்று இது குறித்து பேசியிருந்தார்.

இதையடுத்து, இலங்கை அரசியலமைப்பிற்கு முரணாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு, பஷீருக்கான நியமன கடிதத்தை வழங்கியிருந்தது.

இதையடுத்து பல ஊடகங்களும் இதில் கவனம் செலுத்த, பஷீரின் கடந்த கால மோசடிகள் சில அம்பலப்படுத்தப்பட்டன.

இதையடுத்து அவர் விசாரணை வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டார். தொடர்ந்தும் அவரை பதவியில் வைத்திருக்க முடியாத நிலைமை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு ஏற்பட, இப்பொழுது மீண்டும் இந்திரா மோகனிற்கு அந்த நியமனத்தை வழங்கியுள்ளது.