மட்டக்களப்பில் மறைத்துவைக்கப்பட்ட ஆயுதங்கள்! வெளிவரும் உண்மைகள்..

கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் சில்லிக்கொடியாறு பாலத்திற்கு அருகில் இருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது ரி-56 ரக துப்பாக்கிகள் மூன்றும் அதற்குரிய மகசின்கள் ஐந்தும் ஒரு குழியில் பொலித்தின் பைகளினால் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஆயுதங்கள் கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளினால் இப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் இதுதொடர்பில் அப்பகுதியில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருதாகவும் மேலும் குறிப்பிட்டனர்.

இவ் ஆயுதங்கள் விடுதலைப்புலிகளுடையது எனக் கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் மிக மிகக் குறைவு எனக் கூறப் படுவதுடன் ஆன்மையில் முஸ்லீம்கள் ஆயுதம் வைத்திருப்பதாக எழுந்த குற்றச் சாட்டை அடுத்து இவ் ஆயுதங்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.