துப்பாக்கிச் சூட்டை நடாத்தி மனித கொலைகளை மேற்கொள்ள முயற்சித்தமை மற்றும் மேலும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பத்தரமுல்லை – தலங்கம பகுதியில் வைத்து நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அஹூன்கல்ல பகுதியில் கடந்த முதலாம் திகதி நபரொருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் தலங்கம மற்றும் பலபிட்டிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.