கடந்த 24 மணித்தியாலங்களில் ஐவர் பலி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய புத்தளம் மஹவவ பகுதியில் 77 வயதுடைய பாதசாரி ஒருவர் மீது பாரவூர்தி ஒன்று மோதுண்டமையினால் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் பொத்துஹெர பகுதியில் உந்துருளி ஒன்றும் பேருந்தும் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், மீரிகம பகுதியில் சிற்றூர்ந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 70 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, உந்துருளி விபத்துக்களில் இங்கிரிய மற்றும் குளியாபிட்டி பகுதியை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.