அம்பலாந்தொட புதிய மூன்று மாடிக்கட்டடம் பொதுமக்களிடம் கையளிப்பு

அம்பலாந்தொட பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய மூன்று மாடிக் கட்டடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது. பிரதேச நிர்வாக நடவடிக்கைகளை முறையாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் மேற்கொள்ளும் நோக்குடன் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் நிதி ஏற்பாட்டின் கீழ் 990 இலட்சம் ரூபா செலவில் இந்த புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து கட்டடத்தை திறந்துவைத்த ஜனாதிபதி அதனை சுற்றிப் பார்வையிட்டார்.

பிரதேச மக்களுக்கு காணி உறுதி வழங்குதல், அங்கவீனமுற்றவர்களுக்கு உபகரணம் வழங்குதல், பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விவசாயத்துறை அதிகாரிகளின் சேவையை பாராட்டி பரிசில்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இதன்போது நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் அமைச்சர் வஜிர அபேவர்தன உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.பீ. கொடிகார, ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் எம்.கே. ஹரிஸ்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.