இலங்கையின் தீர்மானத்தால் சிக்கலில் ஐ.நா!

இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையும் என, ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் புதிய ஆணையாளர் மிச்செல் பச்செலெட் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிய நிலையில், அங்கு அவர் ஆற்றிய முதலாவது உரையிலே இவ்வாறு இலங்கை குறித்து தெரிவித்தார்.

நாட்டில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்த திட்டத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இத்தீர்மானமானது, அண்மைக்காலமாக அதிகரித்துவரும் இனவாத மற்றும் இனங்களுக்கு இடையிலான வன்முறைகளை எதிர்த்து போராடுவதற்கு இடையூறாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.