பாடசாலை சேவை போக்குவரத்து கட்டணத்தையும் அதிகரிக்க தீர்மானம்..!

சிறி லங்கா பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கம் மாணவர்களுக்கான போக்கு வரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இதற்கமைய நூற்றுக்கு 5 வீதம் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையினால் இந்த தீர்மாணத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.