பல்கலைக்கழக வாய்ப்பைப் பெற்றுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்

2017, 2018 கல்வி ஆண்டுகளுக்காக பல்கலைக்கழக வாய்ப்பைப் பெற்றுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதற்கான முதல் கட்ட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்முறை 30 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட இருக்கிறார்கள் என்று மஹாபொல நிதியத்தின் பணிப்பாளர் பராக்கிரம பண்டார தெரிவித்துள்ளார்.

தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் வழங்கப்பட இருக்கிறது.