மட்டகளப்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை எடுத்த விபரீத முடிவு! பிள்ளைகளின் மோசமான நிலை?

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த விரைவு ரயிலின் முன்னால் பாய்ந்து மூவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிக்கந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போவத்த பிரதேசத்தில் இச்சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்றிருந்த நிலையில், உயிரிழந்தவர்கள் தந்தையும், இரு பிள்ளைகளும் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் போவத்தை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய கதிரவேல் விஜயசூரிய மற்றும் அவருடைய பிள்ளைகளான 12 வயதுடைய ரஞ்சித் சங்கரூபன், 2 வயதுடைய விதர் சஞ்சித் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் தந்தையும், 4 வயது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர், 12 வயது மகன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.


மனைவியுடனான பிரச்சினை காரணமாக கணவன் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையிலேயே இவ்வாறானதொரு முடிவை தேடிக் கொண்டதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.