மைத்திரி மகிந்தவுடன் இணைந்தால் கொள்கைக்கு முரணாகிவிடும்

ஐக்கிய தேசிய கட்சி 2020 ஆம் ஆண்டு தனித்தே ஆட்சியமைக்கும். சிறிலங்கா சுதந்திர கட்சி பொது ஜன பெரமுனவுடன் ஒன்றினைந்தால் அது அரச தலைவரின் கொள்கைக்கும், தேசிய அரசின் பொது கொள்கைக்கும் முரணாக அமையும் என்று தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்பட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.