நீர்கொழும்பு கடற் பகுதியில் 88 பேர் கைது

நீர்கொழும்பு மேற்கு கடற் பகுதியில் சட்டவிரோத குடியேறிகள் 88 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடற்படை பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.

இன்று காலை கைது செய்யப்பட்ட குறித்த படகில் இருந்த அனைவரும் இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் சட்டவிரோதமாக குடியமரும் நோக்கில் வேறு நாடு ஒன்றுக்கு பயணிக்க முற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இவர்கள் அனைவரையும் கொழும்பு மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.