இலங்கை மாட்டுவண்டிச் சவாரி வரலாற்றில் 98 சோடிக் காளைகள் பங்குபற்றிய மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றது.
கிளிநொச்சி சவாரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், அக்கராயன் சவாரித் திடலில் போட்டி இடம்பெற்றது. இதில் 98 சோடிக் காளைகள் கலந்து கொண்டன. 5 பிரிவுகளாகப் போட்டிகள் இடம்பெற்றன.