மட்டக்களப்பு தேசத்தின் பெருமைமிகு தான்தோன்றியப்பரின் கொடியேற்றம்..!

கிழக்குமகாணத்தில் பூர்வீக வரலாற்று தேரோடும் ஒரேயொரு ஆலயமாக திகழும் மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் கொடிகட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஷ்வரர் ஆலயத்தின் இவ்வருட மகா உற்சவ பெருவிழா ஆரம்ப நிகழ்வின் திருக்கொடியேற்றும் மகா நிகழ்வு 11/09/2018,செவ்வாய்கிழமை அதிகாலை 5,மணிக்கு பக்திபூர்வமாக அடியார்கள் புடைசூழ மங்கல வாத்தியங்கள் முழங்க இடம்பெற்றது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சச்சிதானந்தம் குருக்கள் அவர்களால் கொடி ஏற்றம் நடைபெற்றது. சிவஸ்ரீ சோதிலிங்கம் குருக்கள் அவர்களும் இந்த கொடியேற்ற பூசை அனுஷ்டானங்களை மேற்கொண்டார்.

11/09/2018 தொடக்கம் 09, நாட்கள் 19/09/2018, வரை ஆலயத்திருவிழாக்களும் 20/09/2018, தொடக்கம் 29/08/2018 வரை ஒன்பது பூர்வீக குடித்திருவிழாக்களும் இடம் பெற்று 30/08/2018, ஞாயிறு பி.ப 4, மணிக்கு தேரோட்ட பெருவிழாவும் இடம்பெற்று அன்று இரவு திருவேட்டை விழாவும் மறுநாள் காலை தீர்த்தோற்சவத்துடன் இவ்வருட மகோற்சவ உற்சவ பெருவிழா இனிதே நினைவுறும்.

குடித்திருவிழா விபரம்:

 • 20/09/2018 – வியாழக்கிழமை, பொன்னாச்சிகுடி திருவிழா.
 • 21/09/2018 – வெள்ளிக்கிழமை , திடகன் குடி திருவிழா.
 • 22/09/2018 – சனிக்கிழமை சஷ்டி குடி திருவிழா.
 • 23/09/2018 – ஞாயிற்றுக்கிழமை பெத்தான்குடி திருவிழா.
 • 24/09/2018 – திங்கள்கிழமை கோப்பி குடி திருவிழா.
 • 25/09/2018 – செவ்வாய்கிழமை கச்சிலாகுடி திருவிழா.
 • 26/09/2018 – புதன்கிழமை பணிக்கொணா குடி திருவிழா,
 • 27/09/2018 – வியாழக்கிழமை படையாட்சி குடி திருவிழா,
 • 28/09/2018 – வெள்ளிக்கிழமை கலிங்ககுடி திருவிழா.
 • 29/09/2018 – சனிக்கிழமை உலகிப்போடி குடி திருவிழா.
 • 30/09/2018 – ஞாயிற்றுக்கிழமை பி.ப 4, மணி தேரோட்டப்பெருவிழா.
 • அன்று இரவு 7, மணிக்கு திருவேட்டை விழா.
 • 01/10/2018 – திங்கள்கிழமை மு.ப 6, மணி தீர்தோற்சவம்.

கொக்கட்டிச்சோலை சிவன் கோயில் தேரோட்டம் என்பது இரண்டு தேர்கள் வடம்பிடித்து ஆண் அடியார்கள் மட்டுமே இழுக்கும் அபூர்வ நிகழ்வாகும். தேரோட்டம் என்றால் அது கொக்கட்டிச்சோலை சிவன் கோயில் என்பதே உண்மை. அடியார்கள் நன்மை கருதி தினமும் ஆலய அன்னதான சபையால் அன்னதானம் வழங்கப்படும்.