தேசிய சிறைக் கைதிகள் தினத்தையொட்டி ஜனாதிபதிக்கு கொடி அணிவிப்பு!

தேசிய சிறைக் கைதிகள் தினத்தையொட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கொடி அணிவிக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

சிறைக் கைதிகளின் நலனோம்புகையை நோக்காகக் கொண்டு, ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் தேசிய சிறைக்கைதிகள் தினத்தையொட்டி ஜனாதிபதிக்கு குறித்த கொடி அணிவிக்கப்பட்டது.

மேலும், சிறைக் கைதிகள் நலன்புரி சங்கத்தின் செயற்திட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் ஆர்.ஏ.டி. சிறிசேன அவர்களால் ஜனாதிபதி அவர்களுக்கு முதலாவது கொடி அணிவிக்கப்பட்டதுடன், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுக்கோரள, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்க ஆகியோர் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.