குருணாகலில் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் தூப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்

குருணாகல் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் உத்தரவினையும் மீறி நிறுத்தாமல் சென்ற வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டிலேயே மேற்படி நபர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது குறித்த வாகனத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பயணித்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் குருணாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.