இலங்கையை பெருமை படுத்திய தர்சினி உள்ளிட்ட வலைப்பந்தாட்ட அணிக்கு வரவேற்பு!

இலங்கைக்கு வெற்றிவாகை கூடி நாடுக்கு பெருமை சேர்ந்த தர்சினி சிவலிங்கம் உள்ளிட்ட வலைபந்தாட்ட அணி நாடு திரும்பியவேளையில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை வலைபந்தாட்ட அணி இன்று சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பியது.

இதுகுறித்து மேலும், தெரிவிக்கையில் இவர்கள் ஆசிய வலைபந்தாட்ட கிண்ணத்தினை இலங்கைக்கு ஐந்தாவது தடவையும் பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுக்கான வரவேற்பு கௌரவத்தை மாகாண சபை, உள்ளுராட்சி சபைகள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தப்பா வழங்கினார்.

இவ் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஈழத் தமிழ் பெண்ணான தர்சினி சிவலிங்கம் இந்த தொடரின் சிறந்த வீராங்கனையாக தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும், இவர் ஆசியாவின் உயரமான கூடைப்பந்து வீராங்கனை என்ற பெருமையை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.