இன்று சில பகுதிகளுக்கு 8 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும்

பொல்கொல்ல நீர் வழங்கலுக்கு உட்பட்ட சில பகுதிகளில் இன்று 8 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்று காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரையில் இவ்வாறு நீர் விநியோக தடை அமுலில் இருக்கும் எனவும் சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் அமுனுகம வீதி, 606 வீதி, லேவெல்ல, பாபர்வத்த, சிறிமல்வத்த, மடவளை வீதி, பல்லேகுன்னேபான, ஆற்று வீதி, தெகல்தொருவ விகாரை வீதி ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர்த்தடை ஏற்படும் எனவும் சபை தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.