பேருந்தில் பயணிப்பவர்களுக்கான ஓர் அதிர்ச்சிகர செய்தி

எரிபொருள் விலையேற்றத்துக்கு அமைவாக பேருந்து பயணக் கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

அத்தடன் தற்போது நிலவுகின்ற குறைந்த பட்ச பேருந்து பயணக்கட்டணமான 12 ரூபாவை 15 ரூபாவாக அதிகரிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

எரிபொருள் விலை ஏற்றத்தின் காரணமாக, பேருந்து சேவை நடத்துனர்கள் பெரும் நட்டத்தை எதிர்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இன்றையதினம் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக அனைத்து மாகா தனியார் பேருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தேசிய போக்குவரத்து சபையின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது.

இதன்போது பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதா? இல்லையா என்பது தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.