யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த மர்மநபர்கள்!! இதுதான் நடந்தது..

யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸாருக்கு சொந்தமான ஜீப் வண்டியை கடத்தி சென்ற சந்தேக நபர்கள் குறித்த ஜீப் வண்டியுடன் நேற்று இரவே கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொடிகாமம், கச்சாய், பாலவி பிரதேசத்தில் மணல் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக சென்ற பொலிஸார் ஜீப் வண்டியை நிறுத்தி வைத்துள்ளனர். இதன் போது குழுவொன்று இணைந்து ஜீப் வண்டியை கடத்தி சென்றுள்ளது.

உடனடியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஜீப் வண்டியை துறத்தி சென்று சந்தேக நபர் மற்றும் ஜீப் வண்டியை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

யாழில் கடத்தப்பட்ட பொலிஸ் வாகனத்துக்கு இதுதான் நடந்தது!!

கொடிகாமம் பொலிஸாரின் வாகனமொன்றை இனந்தெரியாதோர் கடத்திச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் வாகனத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் கொடிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது..

மேற்படி பாலாவிப் பகுதியில் தொடர்ச்சியாக மணல் கடத்தல் இடம்பெற்று வருவதாகவும் அதனைத் தடுப்பதற்கு அங்கு பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு அங்கு பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது பொலிஸாரின் வாகனத்தை இனந்தெரியாதோர் கடத்திச் சென்றுள்ளனர்.

குறித்த வாகனத்திற்குள் பொலிஸாரின் ஆயுதங்களும் காணப்பட்டதாகவும் அந்த வாகனத்துடன் நின்ற பொலிஸாரைத் தாக்கிவிட்டே வாகனத்தைக் கடத்திச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து ஆயுதங்களுடன் கடத்திச் செல்லப்பட்ட வாகனத்தை பொலிஸார் தேடுதல் வேட்டை நடாத்தினர்.

ஆந்தப் பகுதி முழுவதும் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு நடத்திய தேடுதலால் சில மணி நேரம் அங்கு பெரும் பதற்றமே ஏற்பட்டிருந்தது.

இவ்வாறு அப் பகுதி முழுவதும் நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் கொடிகாமம் ஆலடிப் பகுதியில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தை எடுத்துச் சென்றவர் மது போதையில் இருந்ததாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.