ஒருவர் சடலமாக மீட்பு

திருகோணமலை எத்தாபெந்திவௌ வனப் பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மொறவௌ காவல்துறையினர் இதனைத் தெரிவித்தனர்.

45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மொரவௌ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்