இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான தீர்மானம்

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான தீர்மானம் ஒன்று வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஒரு நடவடிக்கையேனும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்தநிலையில் குறித்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான 5 கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம் ஒன்று நேற்று வடமாகாணசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் சமர்பிக்கப்பட்ட குறித்த பிரேரணை திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.