முல்லைத்தீவில் கரையொதுங்கிய வெள்ளைப் புள்ளிச் சுறாமீன்

முல்­லைத்­தீவு அலம்­பில் கடற்­க­ரை­யில் கரை­யொ­துங்­கிய வெள்­ளைப் புள்­ளிச் சுறா­வைக் காப்­பற்­றிய கடற்­ப­டை­யி­னர், அதனை மீண்­டும் கட­லில் கொண்டு சென்று விட்ட சம்­ப­வம் அண்­மை­யில் இடம்­பெற்­றது.

முல்­லைத்­தீவு மீன்­பிடி ஆய்­வா­ளர் அலு­வ­ல­கத்­தின் ஆய்­வா­ளர் மொஹான் குமார, அலம்­பில் கடற்­படை அதி­கா­ரி­க­ளுக்கு கரை­யொ­துங்­கிய சுறா மீன் குறித்து அறி­வித்­துள்­ளார்.

இத­னை­ய­டுத்து கடற்­ப­டை­யி­னர் கடும் சிர­மப்­பட்டு, சுறா மீனை மீட்டு, 3 கடல் மைல் தொலை­விற்கு கொண்டு சென்று விட்­டுள்­ள­னர்.

சுறாக் குடும்­பத்­தைச் சேர்ந்த மிகப் பெரிய உயி­ரி­ன­மான வெள்­ளைப் புள்­ளிச் சுறா மீன் சுமார் 900 கிலோ கிராம் எடை கொண்­ட­தா­க­வும் 9 மீற்­றர் நீளம் கொண்­ட­தா­க­வும் இருக்­கும் இந்த வகை சுறா மீன்­கள் 70 முதல் 100 ஆண்­டு­கள் வரை உயிர் வாழக் கூடி­யவை.

மேலும் இந்த மீன் இனம் உல­கில் அருகி வரும் மீன் இனம் என அறி­விக்­கப்­பட்­டுள்­ள­ள­து­டன். இலங்­கை­யில் இந்த மீனை பிடிக்க தடை விதிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.