வவுனியாவில் 28 வயது இளைஞனிற்கு காத்திருந்த சோகம்

தமது வீட்டு கிணற்றை இயந்திரம் கொண்டு ஆழப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. படுகாயமடைந்த இளைஞன், வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

அதே இடத்தைச் சேர்ந்த மாகாலிங்கம் நிதர்சன் (வயது 28) என்ற இளைஞனே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.