மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

வவுனியா உக்குளாங்குளத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்

வவுனியா உக்குளாங்குளத்தில் மின்சாரம் தாக்கி வவுனியா உக்குளாங்குளத்தை சேர்ந்த செல்வராசா நிதர்சன் எனும் 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை தனது வீட்டில் உள்ள கிணற்றில் இறங்கி கல் உடைக்கும் இயந்திரம் மூலம் கிணற்றினை வெட்டும் போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றது