யாழில் போதைப்பொருளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்.வமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த இருவரே இன்று அதிகாலை நெல்லியடி பொலிசாரினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லியடி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலையே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோ 300 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.