குருநாகலில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு: நபர் ஒருவர் படுகாயம்!

குருநாகலில் பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போது வான் ஒன்றில் தப்பிச் செல்லமுயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குருநாகல், பீலிக்கடை பிரதேசத்தில் நடந்துள்ளது.

சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார், வான் ஒன்றைத் தடுத்துள்ளனர். அது நிற்காமல் பொலிஸாரின் வாகனத்தையும் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்ததால் அந்த வானின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அச்சம்பவத்தில் சந்தேகநபர் வானின் காயமடைந்துள்ளர். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.