குடித்து விட்டு திருமண வீட்டில் ரகளை செய்த இளைஞன்

திருகோணமலை – சேருநுவர பகுதியில் சாராயம் குடித்து விட்டு திருமண வீட்டுக்கு சென்று ரகளையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீமங்களபுர, சோமபுர பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர் உறவுக்காரர் ஒருவரின் திருமண வீட்டில் அளவுக்கதிகமாக சாராயம் குடித்து விட்டு கதிரை மற்றும் மேசைகளை உடைத்து சேதப்படுத்தியதோடு, சாராய போத்தல்களையும் உடைத்து வீசியதாக சேருநுவர பொலிஸ் அவசர சேவைக்கு பொது மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து குறித்த நபரை கைது செய்துள்ளதாகவும், சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.