பேருவளை கடலில் படகு கப்பலுடன் மோதியதில் நால்வர் பலி: இருவர் காணவில்லை

பேருவளை கடலில் மீன்பிடிக்க சென்ற படகு ஒன்று கப்பலுடன் மோதி விபத்துகுள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் காணவில்லை எனவும் காவல்துறையில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிவிக்கையில் நேற்று மாலை பேருவளை கடலிற்கு 7 பேருடன் படகில் மீன்பிடிக்க சென்றுள்ளதாகவும் சென்றபோது எல்லைக்குள் இருந்த கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த 7 பேரில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் காப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களையும் காப்பற்றப்பட்ட நபரையும் காலி துறைமுக காவல் நிலையத்திற்கு எடுத்து வர கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.