யாழின் பல பகுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு சல்லடை போட்டு தேடுதல் தீவிரம்

யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறி்ப்பான கொக்குவில், மானிப்பாய், சுன்னாகம், ஆனைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொலிஸார் வீதிச் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களை அடுத்து சந்தேகநபர்களைத் தேடும் வேட்டையில் பொலிஸார் களமிறங்கியுள்ளனர் என்று அறியமுடிகிறது.

தென்மராட்சிப் பகுதியில் நேற்று அதிகாலை வீடொன்றுக்குள் வாள்களுடன் நுழைந்த குழு, அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் பெறுமதியான நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்­தூர்­சந்­தி­யில் உள்ள கம­ந­ல­சே­வை­கள் திணைக்­க­ளத்­துக்­குப் பின்­பு­ற­மாக உள்ள ஆசி­ரி­யர் ஒரு­வ­ரின் வீட்­டி­லேயே கொள்­ளைச் சம்­ப­வம் நடந்­துள்­ளது

முகங்­களை மூடிக் கட்­டி­ய­வாறு சுமார் 10 பேர் மதில் பாய்ந்து வீட்டு வள­வுக்­குள் நுழைந்­துள்­ள­னர். அவர்­கள் கைக­ளில் வாள்­கள், கூரிய ஆயு­தங்­களை வைத்­தி­ருந்­துள்­ள­னர். கத­வைத் திறக்­கு­மாறு கூறி­யுள்­ள­னர். வாள்­களை யன்­னல் ஊடா­கக் காட்டி அச்­சு­றுத்­தி­யுள்­ள­னர். வீட்­டி­லி­ருந்­த­வர்­கள் அப­யக் குர­லெ­ழுப்­பி­யுள்­ள­னர். வீட்­டுக் கதவை உடைத்­துக் கொண்டு கொள்­ளைக் கும்­பல் உள்­நு­ழைந்­துள்­ளது.

வீட்­டி­லி­ருந்­த­வர்­களை 6 பேர் வாள்­க­ளைக் காட்டி அச்­சு­றுத்­தித் தமது கட்­டுப்­பாட்­டில் வைத்­தி­ருக்க ஏனை­யோர் வீட்­டைச் சல்­ல­டை­யிட்­டுத் தேடு­தல் நடந்­தி­யுள்­ள­னர். சுமார் 8 பவுண் நகை­கள், 4 ஆயி­ரம் ரூபா ரொக்­கப்­ப­ணம் என்­பன கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன.

சுமார் ஒரு மணி நேர­மாக வீட்­டைத் தமது கட்­டுப்­பாட்­டுக்­குள் கொள்­ளை­யர்­கள் வைத்­தி­ருந்­துள்­ள­னர். அப­யக் குரல் கேட்டு வந்த அய­ல­வர்­க­ளை­யும் கொள்­ளை­யர்­கள் வாள்­க­ளைக் காட்டி அச்­சு­றுத்­தி­னர் என்று கூறப்­ப­டு­கின்­றது.

கொள்­ளைச் சம்­ப­வம் தொடர்­பில் வீட்டு உரி­மை­யா­ள­ரால் கொடி­கா­மம் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

கொள்­ளைச் சம்­ப­வம் தொடர்­பில் உட­ன­டி­யாக பொலி­ஸா­ருக்கு அறிக்­கப்­பட்­டது என்­றும் கொள்­ளை­யர்­கள் தப்­பிச் சென்ற சிறிது நேரத்­தின் பின்­னரே பொலி­ஸார் சம்­பவ இடத்­துக்கு வந்­த­னர் என்­றும் அந்­தப் பகுதி மக்­கள் விச­னம் தெரி­வித்­த­னர்.