சாவகச்சேரியில் 8 தேங்காய் திருடியவரின் நிலை

சாவகச்சேரியில் எட்டு திருட்டு தேங்காய் பறித்தவரை எட்டு நாள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டு உள்ளது.

மட்டுவில் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள தென்னம் தோட்டம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து எட்டு தேங்காய்களை திருடினார் எனும் குற்றசாட்டில் ஒருவரை சாவகச்சேரி காவற்துறையினர் கைது செய்தனர்.

விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை நேற்றைய தினம் திங்கட்கிழமை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து குறித்த நபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.