கோட்டபாயவிற்கு எதிரான வழக்கில் இன்று கிடைத்த அதிரடி தீர்ப்பு

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு டிசம்பர் 4 ஆம் திகதி முதல் தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்றைய தினம் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தங்காலை – வீரகெட்டிய – மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சிய நிர்மாண பணியின் போது 33 மில்லியன் ரூபா முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் 7 குற்றப்பத்திரங்களை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த வழக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.