மைத்திரியின் அதிரடி பணிப்புரை

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

சீசேல்ஸ் நாட்டுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவிற்கு தொலைபேசி ஊடாக அழைத்து, நிவாரண வழங்கலின் போது நிதி ஒதுக்கீட்டை சிக்கலாக பார்க்க வேண்டாம் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

உலர் உணவு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடர்ந்து வழங்குமாறு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்பதற்கு முப்படைகளின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.