மட்டகளப்பில் முல்லைத்தீவு மாணவன் எடுத்த விபரீத முடிவு! கதறி துடிக்கும் பெற்றோர்

மட்டக்களப்பு கல்வியற்கல்லூரி மாணவனின் சடலம் கல்லூரி விடுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர், கல்வியற்கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவனான முல்லைத்தீவை சேர்ந்த 23 வயதுடைய மனுவேல்பிள்ளை பிரதீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கல்லூரி விடுதியில் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள கல்வியற் கல்லூரியில் முதலாம் வருட மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவன் கல்லூரியில் இணையும் போது ஏழு பேர் கொண்ட மாணவ குழுவினால் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் கல்லூரி செல்லமாட்டேன் எனத் தெரிவித்து வீட்டில் இருந்துள்ளார். ஆனால், பெற்றோர் அவரை மீண்டும் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த மாணவனின் சடலம் நேற்று (திங்கட்கிழமை) விடுதியிலிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த மாணவனின் மரணம் தொடர்பாக பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.