இலங்கை எதிர்நோக்கியுள்ள மேலும் ஓர் சிக்கல்..

வெளிநாடுகளில் தொழில்புரிவோரினால் இலங்கைக்கு அனுப்பப்படுகின்ற பணத்தின் பெறுமதி 1.6 சதவீத வீழ்ச்சியை, கடந்த ஜுலை மாதம் பதிவு செய்துள்ளது.

மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை மாதம் வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களால் அனுப்பிவைக்கப்பட்ட பணம் 619 மில்லியன் டொலர்களாகும்.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது இந்த தொகை 1.6 சதவீத வீழ்ச்சி என்று தெரிவிக்கப்படுகிறது.