25 ஆம் திகதிக்கு முன் கொண்டாட்டம் வேண்டுமாம்!! அலைந்து திரியும் சயந்தன்

காசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தன் நச்சரித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் எதிர்வரும் 23 ஆம் திகதி இறுதி அமர்வுடன் 25 ஆம் திகதி முடிவுக்கு வருகின்றது.

இந்நிலையில் சாவகச்சேரி கலாச்சாரப் பேரவையினரை அடிக்கடி தொடர்புகொள்ளும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தன் சாவாகச்சேரியில் தனக்கு பிரமாண்டமான பாராட்டுவிழா ஒன்று நடத்தவேண்டும் என நச்சரித்துவந்துள்ளார்.

பாராட்டுவிழாவிற்கு எனது நிதியை வேண்டுமானால் தருகின்றேன் ஏற்பாடுகளை மட்டும் நீங்கள் செய்யுங்கள் என சயந்தன் கலாச்சாரப் பேரவையுடன் பேரத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி கலாச்சார விழா எனும் பெயரில் சயந்தனுக்கு பாராட்டுவிழா நடத்த கலாச்சாரப் போரவையின் உறுப்பினர்கள் சிலர் முனைப்புக்காட்டிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.