பெண்ணை மரணிக்கும் வரை கொடூரமாக தாக்கும் பதற வைக்கும் கும்பல்

இந்தியா பீகார் மாநிலம் சமஷ்டிபூர் என்னும் இடத்தில் பெண் ஒருவரை ஊரே வேடிக்கை பார்க்க, ஒரு கும்பல் கொலைவெறியுடன் கட்டையால் கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உஷா தேவிக்கும் அவரது கணவர் அசோக் பவனுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் உஷா தேவி அவரது கணவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதனால் அசோக் உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப்பகுதியில் உள்ள ஆண்கள் அந்த பெண்ணை வீதியில் வைத்து ஆளுக்கு ஒருகட்டையால் சரமாரியாக கொடூரமாக கொலைவெறியுடன் தாக்கியுள்ளனர். இதனால் அந்த பெண் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வீடியோ காட்சி வெளியாகி பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கூறிய பொலிஸார் இறந்த அசோக்கின் சடலப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், சிகிச்சைக்கு சேர்த்துள்ள உஷா தேவியிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.