யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை எதிர்த்து முற்றுகை

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவிட்ட புரம் வீமன்காமம் பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வந்த கசிப்புஉற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.

மல்லாகம் மதுவரித் திணைக்களத்துக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சுற்றிளைப்பை மேற்கொண்ட குழுவினர் உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.

கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்கள், 400 லீற்றல் கோடா, 25 லீற்றர் கசிப்பு என்பற்றை மீட்டனர்.சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.