காவல் துறை உத்தியோகத்தரை கொன்ற பெண் வைத்தியருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

பொரலஸ்கமுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பெண் வைத்தியரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த விபத்தில் காவல் துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பெண் வைத்தியர் காவல் துறையினரின் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.