இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் தீவிர கண்காணிப்பில்

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து கொச்சி விமான நிலையத்துக்கு செல்கின்றவர்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இலங்கை, டுபாய் மற்றும் மலேசிய போன்ற இடங்களில் இருந்து கொச்சி விமான நிலையத்தின் ஊடாக அதிக அளவான வெளிநாட்டு நாணயங்களும், தங்கப்பாலங்களும் கடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் இந்த தீவிரக் கண்காணிப்பு இடம்பெறுகிறது.

எவ்வாறாயினும், இந்த கண்காணிப்புக்கு மத்தியிலும் தங்கப்பாளங்களும், வெளிநாட்டு நாணயங்களும் கடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, இலங்கை மற்றும் துபாயில் இருந்து தமிழகத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட தங்கம் சென்னை விமானநிலையத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

தமிழக சுங்க பிரிவு அதிகாரிகள் அவற்றை மீட்டுள்ளதுடன், இரண்டு பேரை கைது செய்து விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் சென்னை மற்றும் கடலூர் பகுதிகளை சேர்ந்தவர்கள்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 9 லட்சம் இந்திய ரூபாய்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.