புதுக்குடியிருப்பில் தத்தெடுத்த பிள்ளைக்கு தாய் செய்த கொடூரம்

புதுக்குடியிருப்பை சேர்ந்த ஜெயதேவி தேவராஜா எனும் தம்பதியினர்க்கு குழந்தை இல்லாமல் இருந்ததால் குழந்தை ஒன்றை தத்தெடுத்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தை தத்தெடுத்து 5 வருடங்களின் பின் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்க தற்போது தத்தெடுத்த அந்த பிள்ளையை மாற்றான் பிள்ளை என கூறி அடித்தும், பிள்ளைக்கு சூடு வைத்தும் கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள் மூலம் காத்தான்குடி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டு பொலிஸ் மூலம் மட்டு போதனா வைத்தியசாலை இல் விடுதி 33இல் சிறுவன் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.

மேலும் அந்த தம்பதியினரை விசாரித்ததன் மூலம் அவர்கள் குழந்தைக்கு தக்காளிப்பழம் சாப்பிடதால் தான் ஒவ்வாமை ஏற்பட்டது எனவும் பொய் சொல்லியிருக்கின்றனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் 33 ஆம் விடுதியில் விசாரித்ததன் மூலம் உணவு ஒவ்வாமை காரணமாக தான் ஏற்பட்டிருக்கிறது என்றும் அரசியல் பலம், பணபலம் மூலமாக இந்த சம்பவத்தை மூடி மறுக்கின்றனர்.

எனவே இந்த சம்பவத்தை விசாரித்து அந்த தம்பதியினருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என கேரிக்கை விடுத்துள்ளனர்.