கொழும்பு சேவையில் ஈடுபடும் இரு பேருந்துக்கள் கோர விபத்து!! 50 பேரின் நிலை..

அம்பாந்தோட்டை - லுனுகம்வெஹர பகுதியில் இரு பயணிகள் பேருது நேருக்கு நேர் மோதுண்டதில் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

அம்பாறையில் இருந்து கொழும்பிற்கு சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்றும் தெஹியத்தகண்டியிலிருந்து காலிக்கு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் மோதுண்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.