வைரமுத்து தொடர்பில் இலங்கையர் வீட்டில் பிற மொழியில் கூறிய கருத்தை அம்பலப்படுத்தும் பாடகர் சின்மயி

கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார் சொன்னது தமிழ் திரையுலகை அதிர வைத்துள்ளது.

இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவாகின்றன. சுவிட்சர்லாந்தில் பாலியல் சம்பவம் நடந்த பிறகு 2014-ல் நடந்த தனது திருமணத்துக்கு வைரமுத்துவை சின்மயி அழைத்து அவர் காலில் விழுந்து ஆசிபெற்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பாலியல் தொல்லை கொடுத்தவர் என்பது தெரிந்து இப்படி காலில் விழலாமா? என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சின்மயியை வைரமுத்து ஓட்டலில் சந்திக்க சொன்னது எப்படி பாலியல் குற்றமாகும் என்றும் பதிவிட்டுள்ளனர்.

பாலியல் புகார்களால் தமிழ், தெலுங்கு பட உலகை கதிகலங்க வைத்த நடிகை ஸ்ரீரெட்டி பாடகி சின்மயிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.