தொடரூந்து வருவதை கண்டு தப்பித்த மனைவி! சிக்கிய கணவர்!

மகிழூர்தியொன்று தொடரூந்தில் மோதி இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

காலி காவற்துறை பிரிவிற்குட்பட்ட நாகரத்ன மாவத்தை தொடரூந்து கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அலுக்கமவில் இருந்து காலி நோக்கி பயணித்த தொடரூந்தில் குறித்த மகிழூர்தி மோதியுள்ள நிலையில் , விபத்தில் காயமடைந்தவர் கராபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெறும் போது காயமடைந்த நபரின் மனைவியும் மகிழூர்தியில் பயணித்துள்ள நிலையில் , தொடரூந்து வருவதை அவதானித்த அவர் மகிழூர்தியில் இருந்து இறங்கி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.