பலரும் சிரித்த பொது மேடையில் சிரிப்பின்றி சுமந்திரன்

ஜனாதிபதி விகாரைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அவர் பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.

நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதாக கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்த அதிகாரத்தை பயன்படுத்தி முறையற்ற விதத்தில் செயற்படுத்துகின்றார் என அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜயதேவ் உயன்கொட தெரிவித்தார்.

மாதுலுவாவே சோபித தேரரின் நினைவு தின நிகழ்வு இன்று வியாழக்கிழமை புதிய நகர மண்டபவத்தில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையில்,

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி விகாரைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அவர் பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார். மனிதனுக்கு காணப்பட வேண்டிய சாதாரண குணங்கள் அனைத்தையுத் புறந்தள்ளி செயற்படுகின்றார்.

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதும் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதாகவும், ரணிலை பிரதமராக்குவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி இப்போது அனைத்தையும் மறந்து, நிறைவேற்றதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றார்.

இன் நிகழ்வில் பலரும் சிரித்துக் கதைத்த வேளையில் சுமந்திரன் எம்.பி மடும் சிரிப்பின்றி ஆழ்ந்த துயரத்தில் இருந்தமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.