அரசியல் நெருக்கடி நிலைமை குறித்து இலங்கைக்கான அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் கவலை..!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில் இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் ப்ரைஸ் ஹட்ச்சன் கவலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் 14 ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வின் போது நம்பிக்கை வாக்கெடுப்புக்கான சந்தர்ப்பம் நிராகரிக்கப்படலாம் எனவும் கூறியுள்ளார்.

மேலும், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை அடுத்து இலங்கை அரசியலில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரும்பானமையை நிரூபிக்க விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்த போதும், அரசாங்கம் 14 ஆம் திகதியை நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.