ஜனாதிபதி சிறிசேன சற்றுமுன் ரணில் தரப்புக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைச் சீண்டவேண்டாமென்றும் அதனால் விளைவுகள் விபரீதமாகிவிடும் என்றும் ரணில் தரப்பை கடுமையாக எச்சரித்துள்ளார்.

இன்று மாலை இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போதே மைத்திரி மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நாங்கள் நிரூபிப்போம். இதனை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. பல்வேறு வித்தைகளை காட்டி ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார் ரணில். நான் அதற்கு கடைசி வரை இடமளிக்க மாட்டேன்.

மேலும், என்னிடம் பல அஸ்திரங்கள் கைவசம் உள்ளன. அவற்றை பயன்படுத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டுமானால் அதையும் செய்வேன். விளையாட வேண்டாம் என்று நான் சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்” என்றார் அவர்.