இன்னும் சில நாட்களில் அமைச்சரவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும்: சுசில் பிரேம்ஜயந்த

மூவர் அடங்கிய விசேட மேல்நீதிமன்றம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நீதியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்னும் சில நாட்களில் அமைச்சரவை முழுமையாக பூர்த்தி செய்யப்படுமெனவும், அதற்கமைய புதிய அரசாங்கம் ஒரு வருடத்துக்கு மேலாக நாட்டை ஆட்சி செய்யுமெனவும் நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.