மைத்திரியை எதிர்க்க முடியாது மனோ திடீர் அறிவிப்பு! மகிழ்ச்சியில் மைத்திரி

தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக கொண்டுவரப்படும் கண்டனத்தீர்மானங்களுக்கு ஆதரவளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே மேற்கண்டவாறு டுவிட்டியுள்ளார்.

மனோ மேலும் தனது டுவிட்டரில்,

“இலங்கையின் நெருக்கடி நிலைமையை மேலும் அதிகரிக்க நாங்கள் விரும்பவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

இச் செய்தியால் மைத்திரி தரப்பு மகிழ்ச்சியில் உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.